LATEST NEWS
அடேங்கப்பா..! “ஆடைக்காகத் தனி விமானம்” 88 கேரட் வைர நகைகளுடன் லண்டனை அதிரவைத்த ஹாலிவுட் நடிகை ஜெண்டயா…!!
திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காகப் பாரீஸிலிருந்து லண்டனுக்குத் தனி விமானம் மூலம் சொகுசு ஆடை ஒன்றை வரவழைத்து அணிந்து, ஹாலிவுட் நடிகை ஜெண்டயா உலகையே வியக்க வைத்துள்ளார். இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ திரைப்பட பிரீமியர் விழாவுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. பாரீஸ் ஃபேஷன் ஷோவில் அறிமுகமான ‘ஷியாபரெல்லி’ நிறுவனத்தின் வெள்ளை நிற கவுன் ஆடை பிடித்துப்போனதால், ஆடை வடிவமைப்பாளர் லா ரோச் அதனைத் தனி விமானத்தில் லண்டனுக்குக் கொண்டு வந்தார்.
இந்த விலையுயர்ந்த கவுன் ஆடையுடன், 88 கேரட்டிற்கும் அதிகமான எடையுள்ள ‘சோபார்ட்’ பிராண்ட் அசல் வைர நகைகளையும் ஜெண்டயா அணிந்து ரெட் கார்பெட்டில் ஜொலித்தார். குறிப்பாக, அவர் அணிந்திருந்த 12.37 கேரட் எடையுள்ள பெரிய வைர நெக்லஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
‘தி ஒடிஸி’ திரைப்படத்தில் ஜெண்டயா ‘அத்தீனா’ என்ற கதாபாத்திரத்திலும், அவரது கணவர் டாம் ஹாலண்ட் ‘டெலிமக்கஸ்’ என்ற கதாபாத்திரத்திலும் இணைந்து நடித்துள்ளனர். உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது
