LATEST NEWS
ஐயோ பாஸே கன்பியூஸ் ஆகிட்டாரு.! “அது அவரோட காரு சார்..” உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற எடப்பாடி.. சட்டப்பேரவை முடிந்ததும் பரபரப்பு…!!!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரில் தவறுதலாக ஏற முயன்ற சுவாரசிய சம்பவம் தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் இன்று அரங்கேறியுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு, வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி அங்கு நிறுத்தப்பட்டிருந்த உதயநிதி ஸ்டாலினின் காரை நோக்கிச் சென்றுள்ளார். இதனை கவனித்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தினர் .
அவரிடம் “அது எதிர்க்கட்சித் தலைவரின் கார் சார்” என்று கூறி, எடப்பாடி பழனிசாமியை அவரது சொந்த காரை நோக்கி காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். இந்தத் தவறை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, உடனடியாகத் தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். சட்டப்பேரவை வளாகத்தில் நடந்த இந்த எதிர்பாராத நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே பெரும் சுவாரசியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது .
குறிப்பிடத்தக்க வகையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்திலும் இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருந்தது. அப்போது துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினின் காரில், எடப்பாடி பழனிசாமி இதேபோல தவறுதலாக ஏற முயன்றார் . தற்போது மீண்டும் அதே போன்றதொரு நிகழ்வு சட்டப்பேரவை வளாகத்தில் மறுபடியும் அரங்கேறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது
