BREAKING: “செப்டம்பர் 2-க்குள் தூக்குங்க..!” பொன்முடியைக் கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: “செப்டம்பர் 2-க்குள் தூக்குங்க..!” பொன்முடியைக் கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Published

on

சைவ, வைணவ சமயம் மற்றும் பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், பொன்முடியைக் கைது செய்து ஆஜர்படுத்த சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, வரும் செப்டம்பர் 2-ம் தேதிக்குள் பொன்முடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை மற்றும் பிடிவாரண்ட் உத்தரவு, தமிழக அரசியல் வட்டாரத்திலும் குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக தரப்பிலும் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து திமுக தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in