LATEST NEWS
“தலைக்கு 50 ஸ்வீட் பாக்ஸ்.. தவெக அரசை வீழ்த்த திமுகவின் புது ‘ஆபரேஷன்’.. தமிழக அரசியலைக் கலக்கும் அதிரடித் தகவல்..!!”
தவெக அரசை ஆட்டம்காணச் செய்யும் நோக்கில் திமுக புதிய அதிரடி ஆபரேஷனில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. உதயநிதி மீதே கை வைக்கப்பட்டதால் கடும் கோபத்தில் இருக்கும் திமுக தலைமை, இந்த ஆட்சி மேலும் தொடரக் கூடாது என்பதில் தீவிரமான முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதன் பின்னணியில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காகத் தலைக்கு 50 ‘ஸ்வீட் பாக்ஸ்’ என ரேட்டை உயர்த்தி வலைவிரிக்க மேல்மட்ட உத்தரவு பறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கை செந்தில் பாலாஜி எதிர்கொண்டு வரும் சூழலில், இந்தத் தகவல் தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
