தவெகவிலிருந்து விலக முடிவு… அதிமுக புள்ளிகள் எடுத்த திடீர் முடிவு… செங்கோட்டையனுக்கு ஷாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தவெகவிலிருந்து விலக முடிவு… அதிமுக புள்ளிகள் எடுத்த திடீர் முடிவு… செங்கோட்டையனுக்கு ஷாக்..!!

Published

on

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு உடனடியாகக் கட்சியில் பதவி வழங்க முடியாது எனத் தவெகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. புதிய கட்சியில் சேர்ந்த பிறகு உள்ளூர் அளவில் தங்களுக்குரிய அரசியல் மரியாதையும், முக்கியத்துவமும் குறைந்ததாக அவர்கள் உணர்வதே இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

தவெகவில் தங்களுக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்துள்ள இந்த நிர்வாகிகள், மீண்டும் தங்களது தாய் கழகமான அதிமுகவிற்கே திரும்புவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இதே போன்ற சூழ்நிலை காரணமாக, தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி, தனக்குரிய மரியாதை இல்லை எனக் கூறி சேர்ந்த ஒரே வாரத்தில் கட்சியிலிருந்து விலகியது இங்கு குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in