சூப்பர் நியூஸ்..! சென்னை HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு… கலை, அறிவியல் பட்டதாரிகளுக்குப் பொன்னான வாய்ப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர் நியூஸ்..! சென்னை HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு… கலை, அறிவியல் பட்டதாரிகளுக்குப் பொன்னான வாய்ப்பு…!!

Published

on

சென்னை நாவலூரில் உள்ள HCL நிறுவனத்தில் ‘Process Associate’ பணிக்குக் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்டம் பெற்ற புதியவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிக்கு பி.இ மற்றும் பி.டெக் (BE/BTech) படித்தவர்கள் தகுதியற்றவர்கள் ஆவர். விண்ணப்பிக்கும் நபர்களுக்குச் சிறந்த ஆங்கிலத் தொடர்பு திறனும், கணினியில் வேகமாக டைப் செய்யும் திறனும் இருப்பது அவசியமாகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுச் சம்பளமாக ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வழங்கப்படும்.

பணியில் சேருபவர்களுக்கு சுழற்சி முறை பணி நேரம் மற்றும் நிறுவனத்தின் சார்பில் இலவச வாகன வசதியும் வழங்கப்படும். இதற்கான நேர்காணல் இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நாவலூர் எச்சிஎல் டெக் வளாகத்தில் நடைபெறுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் தங்களது சுயவிவரக் குறிப்புகளுடன் இந்த நேர்முகத் தேர்வில் நேரடியாகப் பங்கேற்கலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in