LATEST NEWS
இல்லத்தரசிகளுக்கு பேரிடி..! ரூ.2,500 உயர்வு இப்போதைக்கு சாத்தியமில்லை..? அமைச்சர் KAS கொடுத்த ஷாக்..!!
மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்த அமைச்சர் செங்கோட்டையன் கருத்து ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. வரும் பட்ஜெட்டில் இந்தத் தொகை உயர்த்தி அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு, திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்தே ₹1,000 உரிமைத் தொகையை வழங்கத் தொடங்கியது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். மேலும், தமிழகத்தின் தற்போதைய கடன் சுமையை சரிசெய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த விளக்கத்தின் மூலம், வரவிருக்கும் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை ₹2,500 ஆக உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாவது சந்தேகம் தான் என்று அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கடன் சுமையைக் காரணம் காட்டி கால அவகாசம் தேவை எனக் கூறியிருப்பது, இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படும் என்பதையே காட்டுவதாகக் கருதப்படுகிறது.
