LATEST NEWS
தமிழகத்தில் 1.79 கோடி முட்டாள்கள்.. அதனால் தான் ஆட்சி மாற்றம்… திமுக EX அமைச்சர் சர்ச்சை பேச்சு… சூடாகும் அரசியல் களம்..!!
தமிழகத்தில் உள்ள 34% முட்டாள்களால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று திமுக முன்னாள் அமைச்சர் ஆர். காந்தி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் சுமார் 1 கோடியே 73 லட்சம் (34%) முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் ஏமாந்து வாக்களித்ததால் தான் இந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அரசு பொறுப்பேற்று 120 நாட்களாகியும் வெறும் ரீல்கள் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் சாடியுள்ளார்.
மேலும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களின் பெயர்களை மாற்றுவது மட்டுமே தவெக ஆட்சியின் சாதனையாக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். விவசாயக் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட அவர்கள் நிறைவேற்றவில்லை என்றும், தவெகவுக்கு வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளதாகவும் ஆர். காந்தி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இவருடைய இந்த அதிரடி விமர்சனம் தவெக மற்றும் திமுக ஆதரவாளர்களிடையே சமூக ஊடகங்களில் கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளது.
