LATEST NEWS
“5 நிமிடம் டயலாக் பேசிட்டு போயிட்டாரு” 10 நிமிடம் பேசியிருந்தா உங்களை போட்டிருப்பாங்க… முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த ரகுபதி..!!
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, தமிழக முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். கொளத்தூரில் விஜய் 5 நிமிடங்கள் பேசியதற்கே ‘கொத்து பரோட்டா’ போட்டுவிட்டதாகக் கூறுவதை சுட்டிக்காட்டிய அவர், விஜய் 6-வது நிமிடம் பேசியிருந்தால் தங்களது தலைவர் முதலமைச்சர் ஆகியிருப்பார் என்றும், 10 நிமிடம் பேசியிருந்தால் விஜயையே மக்கள் ‘போட்டிருப்பார்கள்’ என்றும் காட்டமாகத் தெரிவித்தார். மேலும், விஜய்க்கு அரசியல் மேடைகளில் சொந்தமாகப் பேசத் தெரியாது என்றும் ரகுபதி சாடியுள்ளார்.
விஜய்யின் உரையாடல் திறனைக் கேலி செய்த ரகுபதி, அவருக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது 5 நிமிடத்திற்கான திரைக்கதை வசனம் மட்டும்தான் என்றும், அதை மட்டுமே அவர் மேடையில் பேசிவிட்டுச் சென்றுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியலில் தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில், ரகுபதியின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
