LATEST NEWS
நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்..! 300 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட பைக் ஓட்டுநர்.. பதற வைக்கும் கார் விபத்து வீடியோ..!
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் சண்டிதலா பகுதியில் நடந்த பயங்கர விபத்தின் காட்சி, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் வாகனங்களை அதிவேகமாக இயக்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துகிறது. பரபரப்பான நேரத்தில் வந்த கார் ஒன்று, சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் அதிவேகத்தில் சென்று முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
ACCIDENT: ఒళ్లు గగుర్పొడిచే వీడియో
జనాలు రద్దీగా ఉండే చోట వాహనాలను అతివేగంగా నడపడం ఎంతటి ప్రమాదమో పశ్చిమ బెంగాల్లోని హుగ్లీ జిల్లా చండిటాల ప్రమాదం కళ్లకు కడుతోంది. రద్దీ సమయంలో స్పీడ్ బ్రేకర్ని గమనించకుండా వేగంగా దూసుకొచ్చిన కారు ఓ బైకర్ను ఢీకొట్టి 300 అడుగుల దూరం… pic.twitter.com/ABAIYGmiD8— BigTV APP (@BigtvApp) July 26, 2026
மோதிய வேகத்தில், இருசக்கர வாகன ஓட்டியை சுமார் 300 அடி தூரத்திற்கு அந்த கார் தரதரவென இழுத்துச் சென்றது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை நடுங்க வைக்கும் இந்த விபத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
