LATEST NEWS
அடடே…செம ஐடியாவா இருக்கே..! ஆசிரியர் உருவாக்கிய அட்டென்டன்ஸ் போர்டில்… குஷியாக ‘பிரசண்ட்’ போடும் குழந்தைகள்..! இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் உருவாக்கிய ஒரு விசித்திரமான மற்றும் ஆக்கபூர்வமான சுய வருகைப் பதிவு போர்டு வைரலாகி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பொதுவாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவர்களின் பெயர்களை அழைத்து வருகைப் பதிவு செய்வார்கள். ஆனால், இந்த ஆசிரியர் காலி தீப்பெட்டிகளைப் பயன்படுத்தி மாணவர்கள் தாங்களாகவே வருகைப் பதிவு செய்யும் ஒரு சுவாரஸ்யமான முறையை உருவாக்கியுள்ளார்.
இந்த வருகைப் பதிவு போர்டில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக தீப்பெட்டிகள் பொருத்தப்பட்டு, அதன் மேல் அவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒரு மாணவர் பள்ளிக்கு வராதபோது அந்தத் தீப்பெட்டியில் சிவப்பு நிறத்தில் ‘Absent’ என்று இருக்கும். மாணவர் பள்ளிக்கு வந்ததும், தீப்பெட்டியை லேசாக மேலே நகர்த்தினால், அடியில் பச்சை நிறத்தில் ‘Present’ என்று தோன்றும். இதன் மூலம் மாணவர்கள் தினமும் தாங்களாகவே தங்களின் வருகையைப் பதிவு செய்கிறார்கள்.
https://www.instagram.com/reel/DbLdbCsTpyZ/?utm_source=ig_web_button_share_sheet
இந்தச் சிறிய முயற்சி மாணவர்களிடையே பெரும் மாற்றத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தினமும் பள்ளிக்கு வந்ததும் வருகையைப் பதிவு செய்வது அவர்களுக்கு ஒரு விளையாட்டு போல இருப்பதால், அவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகிறார்கள். இதனால் மாணவர்களிடம் தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் நேரத்தின் முக்கியத்துவம் போன்ற நற்பண்புகள் வளர்கின்றன. இன்ஸ்டாகிராமில் ‘mind_map_master’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் கண்டு ஆசிரியரின் ஆக்கபூர்வமான யோசனையைப் பாராட்டி வருகின்றனர்.
