LATEST NEWS
“பதவிக்கு பரிந்துரையா? வாய்ப்பே இல்லை… ஒரே போடாக போட்ட அமைச்சர் K.A.S… அப்செட்டில் அதிமுக மாஜிக்கள்.. கொங்கு அரசியலில் திடீர் பூகம்பம்..”!!
கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றிழகத்தில் புதிதாக இணைந்த முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு உடனடியாக எந்தக் கட்சியிலும் பதவி வழங்கிட முடியாது என்பதை கே.ஏ.செங்கோட்டையன் மிகவும் கறாராகத் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவி வழங்கத் தான் தலைமைக்கு பரிந்துரை செய்யப் போவதில்லை என்றும் அவர் வெளிப்படையாகக் கூறிவிட்டாராம். இதனால், பெரிய எதிர்பார்ப்புகளோடு புதிய பயணத்தைத் தொடங்கிய எக்ஸ்-அதிமுக பிரமுகர்கள் கடுமையான அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் நில்லாமல், புதிய நிர்வாகிகள் தங்களின் தீவிர களப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் மூலமாகவே கட்சித் தலைமையின் கவனத்தையும் நற்பெயரையும் பெற வேண்டும் என்றும், அதன் மூலமாகவே பதவிகளை அடைய வேண்டுமே தவிர குறுக்கு வழியில் பரிந்துரைகளை எதிர்பார்க்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. செங்கோட்டையனின் இந்தத் தீர்க்கமான முடிவால், கொங்குப் பகுதியில் புதிதாக இணைந்த முக்கியப் புள்ளிகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
