BREAKING: பிரபல இளம் கிரிக்கெட் வீரர் ஷபூர் ஜத்ரான் காலமானார்… பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு நேர்ந்த சோகம்… ரசிகர்கள் அதிர்ச்சி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: பிரபல இளம் கிரிக்கெட் வீரர் ஷபூர் ஜத்ரான் காலமானார்… பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு நேர்ந்த சோகம்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!

Published

on

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஜத்ரான் (38) அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு காலமானார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அவர் கடந்த சில மாதங்களாக ‘ஹெமோபாகோசைடிக் லிம்போஹிஸ்டியோசைட்டோசிஸ்’ (HLH) எனப்படும் நோய் எதிர்ப்பு மண்டல குறைபாட்டு நோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு, டெல்லி – என்சிஆர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் தனது 39-வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே உயிரிழந்துள்ளார்.

ஷபூர் ஜத்ரானின் மறைவுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் சக சர்வதேச வீரர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சர்வதேச அரங்கில் வளர்ச்சி பெறுவதற்கு அடித்தளமாக இருந்த முக்கிய வீரர்களில் இவரும் ஒருவர் என்று கிரிக்கெட் வாரியம் புகழஞ்சலி செலுத்தியுள்ளது. 2009 முதல் 2020 வரை ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ள ஷபூர், 2015 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கான வின்னிங் ரன்களை அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in