LATEST NEWS
கேரள அமைச்சர்கள் ஆவேசம்..! இது இயற்கை பேரிடர் அல்ல… மனிதக் கொலை..! வயநாடு சுரங்கப்பாதை விபத்தின் பின்னணியில் பகீர் உண்மை..!!
வயநாடு கள்ளாடி பகுதியில் அனக்கம்போயில்-மேப்பாடி சுரங்கப் பாதை திட்டப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, இயற்கையானது அல்ல என்றும் அது மனிதத் தவறுகளால் ஏற்பட்ட ஒன்று என்றும் கேரள வேளாண்மைத் துறை அமைச்சர் டி. சித்திக் மற்றும் முதல்வர் வி.டி. சதீசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சுரங்கப் பாதை அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட டன் கணக்கிலான மண்ணை, அறிவியல் பூர்வமற்ற முறையில் அதே இடத்தில் குவித்து வைத்ததே இந்த விபத்துக்கு முதன்மைக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் பெய்த 265 மிமீ கனமழை காரணமாக, அந்த மண் குவியல் சரிந்து விழுந்து பெரும் விபத்தாக மாறியுள்ளது.
இந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணால் ஆபத்து நேரிடலாம் என்று மாவட்ட நிர்வாகமும், பேரிடர் மேலாண்மை ஆணையமும் முன்னரே எச்சரித்திருந்தன. கடந்த ஜூன் மாதமே இந்த மண் குவியல்களை உடனடியாக அந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரும், பொதுப்பணித்துறை அமைச்சரும் ஒப்பந்ததாரர்களுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தனர். எனினும், அந்த எச்சரிக்கைகளையும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களையும் ஒப்பந்த நிறுவனத்தினர் அலட்சியப்படுத்தி மண்ணை அகற்றத் தவறியதே தற்போதைய அசம்பாவிதத்திற்கு வழிவகுத்துள்ளது என்று அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளத
இந்த கோர நிலச்சரிவில் சிக்கி இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மண்ணுக்குள் புதையுண்டு மாயமாகியுள்ளதால் அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காயமடைந்த 7-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீட்கப்பட்டு விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை , தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று அதிநவீன உபகரணங்களுடன் மீட்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ளனர்.
