CINEMA
வயநாட்டுக்கு உதவிக்கரம் நீட்டிய 90’S நடிகைகள்…. ரூ.1 கோடி நிவாரணம் வழங்கல்…!!!
நிலச்சரிவால் வயநாடு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளர்க. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவுவதற்கு கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர். மேலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்த நிலையில், தமிழ் திரையுலகினர் சார்பாக நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி, லிசி உள்ளிட்ட 90s நடிகைகள் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண ஒரு கோடி நிதி உதவி அம்மாநில முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார்.