என்ன ஹிந்தியில பேசணுமா…? அப்போ எதுக்கு என்ன கூப்ட்டிங்க…. செம கடுப்பான நடிகை மீனா…!! - cinefeeds
Connect with us

CINEMA

என்ன ஹிந்தியில பேசணுமா…? அப்போ எதுக்கு என்ன கூப்ட்டிங்க…. செம கடுப்பான நடிகை மீனா…!!

Published

on

80 மற்றும் 90களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை மீனா. இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்து கொண்டு வருகிறார். இவர்களுடைய மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் நடித்தார். அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழாவிற்கு மீனாவை அழைத்து இருக்கிறார்கள் அவரும் சென்றுள்ளார்.

இந்த விழாவிற்கு இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழி நட்சத்திரங்கள் வருவார்கள். இந்நிலையில் அங்கு செய்தியாளர்கள் மீனாவை தமிழ் பேச வேண்டாம் ஹிந்தியில் பேசுங்கள் என்று கூறுகிறார்கள். அதற்கு ஹிந்தி என்றால் என்ன எதற்கு கூப்பிட்டீங்க? தென்னிந்தியா மட்டும் வருகிறார்கள் என நினைத்தேன். தென்னிந்திய படங்கள் சிறப்பாக இருக்கின்றன தென்னிந்தியராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று பேசியுள்ளார்.

Advertisement