CINEMA
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் சண்டை போடும் முத்து…. உச்சகட்ட மகிழ்ச்சியில் சிரிக்கும் விஜயா…. வெளியான புரோமோ…!!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறக்கடிக்க ஆசை என்ற சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஒரு வழியாக சிறந்த ஜோடி போட்டியில் முத்து மற்றும் மீனா ஜோடி வெற்றி பெற்று ஒரு லட்சம் ரூபாய் பரிசாக பெற்றுள்ளார்கள் . அதனை வைத்து தன்னுடைய வீட்டின் மேலே புதிய அறை ஒன்றை கட்டுவதற்கு திட்டம் போட்டுள்ளார்கள். இதுவரை மகிழ்ச்சியாக சென்ற இந்த கதையில் தற்போது பிரச்சினை வர ஆரம்பித்துள்ளது. மீனாவின் தம்பி சத்யாவின் பிறந்தநாள் கோவிலுக்கு கூழ் ஊற்றுவதற்கு, முத்துவிற்கு தெரியாமல் சென்ற மீனா, தற்போது விஜயாவால் அவரிடம் மாட்டிக் கொள்கின்றார்.
இதனால் கோபத்தில் முத்து மீண்டும் குடிப்பழத்திற்கு குடிப்பழக்கத்திற்கு சென்றதோடு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மீனாவிடம் கடுமையான சண்டை இட்டதை விஜயா பார்த்துக் கொண்டிருக்கிறார். கடைசியில் மீனாவை வன்மத்தோடு பேசியுள்ளார். தான் இன்னும் எதிர்பார்த்ததாகவும் அதைவிட குறைவாகத்தான் சண்டை நடந்துள்ளது. தற்போது அல்வா சாப்பிடணும் போல இருப்பதாகவும் கூறி அவர் கடுப்பேத்தியுள்ளார். இந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
View this post on Instagram