CINEMA
பத்திரமா இருங்க உங்க கிட்னியை எடுத்திடுவாங்க…. நடிகர் நானியை எச்சரித்த SJ சூர்யா…!!

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி தற்போது சூர்யா சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியானது. ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் படக்குழு கலந்துகொண்டது. அந்த பேட்டியின் பொழுது தொகுப்பாளர் நானியிடம் பாட்டு பாடுமாறு கேட்டிருக்கிறார். உடனே இடையில் குறுக்கிட்ட நடிகர் எஸ் ஜே சூர்யா நானியை பாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் ஒரு முறை தான் பாடிய பாடல் வீடியோவை எடிட் செய்து ட்ரோல் செய்தார்கள் .தற்போது உங்களையும் அதுபோல் ட்ரோல் செய்வார்கள் என்றும் கவனமாக இருங்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் வடிவேலு காமெடி காட்சி ஒன்றை விளக்கிய எஸ்.ஜே சூர்யா உங்களை பாட வைப்பதாக முயற்சித்து வடிவேலு காமெடியில் வருவதைப் போல உங்களுடைய கிட்னி எடுத்துக் கொள்வார்கள். பத்திரமாக இருங்கள் என்று கூறினார் .இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
— videos (@videos890) August 18, 2024