CINEMA
பல வருடங்களுக்கு பின் அஜித்தை சந்தித்த S.J சூர்யா…. எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு…!!!
ஆசை மற்றும் உல்லாசம் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் எஸ்.ஜே சூர்யா. இவருடைய திறமையை கண்டு ஆச்சரியமடைந்த நடிகர் அஜித் அவருக்கு வாய்ப்பு கொடுத்து வாலி என்ற படத்தின் மூலமாக அவரை இயக்குனராக அறிமுகமானார். இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது நடிகர் அஜித்துடன் எஸ்.ஜே சூர்யா அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் எஸ் ஜே சூர்யா. மேலும் அதில் பல வருடங்களுக்குப் பிறகு என்னுடைய வழிகாட்டியான அஜித்தோடு மகிழ்ச்சியான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.