CINEMA
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் வாழ்க்கையில் இப்படியொரு சோகம்…. கலங்கிப்போன ரசிகர்கள்…!!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலின் ஹீரோயினாக கோமதி பிரியா நடித்துள்ளார். இந்நிலையில் ஆரம்ப காலத்தில் அவருடைய வாழ்க்கையில் அனுபவித்த சோகங்கள் குறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சீரியலை போல நிஜ வாழ்க்கையிலும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய வாழ்க்கையும் ஆரம்பத்தில் எளிமையாகவே இருந்தது.
மதுரையில் உள்ள அரசு பள்ளியில் தான் இவர் படித்துள்ளார். தந்தை சம்பாதித்த கொஞ்ச பணத்தில் வீட்டை கட்டி உள்ளார் . இதற்கு இடையில் கடன் அதிகரித்ததால் ஆசையாக கட்டிய வீட்டையும் அம்மா வைத்திருந்த நகையும் விற்று கடனை அடைத்துள்ளனர். அந்த சமயத்தில் பள்ளி படிப்பை முடித்த இவர் கல்லூரி படிப்பிற்காக தயாராகிக் கொண்டிருந்ததால் போதிய அளவு பணம் இல்லாவிட்டாலும் ஆங்காங்கே உதவி வாங்கி படித்துள்ளார். படிக்கும் போதே பகுதி நேர வேலையாக சீரியல்களிலும் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது காலப்போக்கில் சின்னத்திரையில் பிரபலமாக கதாநாயகியாக மாறி உள்ளார்.