CINEMA
சிறகடிக்க ஆசை: நீ ஜீவாவோடு லிவிங்கில் இருந்தபோது….. அவ கர்ப்பம் ஆனாளா..? கொந்தளித்த ரோகிணி….!!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அனைவரும் தங்களுடைய வேலையில் பரபரப்பாக சென்று வருகிறார்கள். ஆனால் மனோஜ், ரோகிணி இருவரும் சற்று சறுக்களை சந்தித்து வருவதோடு மனோஜின் செயல் ரோகிணிக்கு சற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோகிணி தனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற சந்தேகத்தில் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துள்ளார். அவருக்கு எந்த ஒரு குறையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
ஆனால் ரோகிணி மருத்துவமனைக்கு வந்ததை சீதா மீனாவிடம் சொன்னதால் மீனா, ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் என்று தவறாக புரிந்து கொண்டு வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிப்பு செய்து கொடுக்கிறார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த ரோகினி மனோஜையும் பரிசோதனைக்கு அழைக்கிறார். ஆனால் மனோஜ் பரிசோதனைக்கு வர விரும்பாமல் பேசி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ரோகினி ஜீவாவுடன் லிவிங் இருந்தபோது அவர் கர்ப்பமானாளா என்று கேள்வி எழுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.