CINEMA
“தங்கலான்” முதல் பாதி பார்த்ததுமே அழுது விட்டேன்…. படம் குறித்து விமர்சனம் சொன்ன பிரபலம்..!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் இசையமைத்துள்ளார் . இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. இதனை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த படத்தை பார்த்துவிட்டு பேட்டி ஒன்றில் தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார். அதில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். படத்தை பார்த்தவுடன் உடனடியாக விக்ரம் அண்ணா மற்றும் பா.ரஞ்சித் இருவருக்கும் போன் செய்து பேசினேன் . படத்தின் முதல் பாதி பார்க்கும் போது எனக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது .இந்த மாதிரி படத்தை நான் தயாரித்து இருக்கிறேன் என்பது பெருமையாக உள்ளது என்று கூறினார்.