CINEMA
TRB-யில் முதலிடத்தில் இருக்கும் சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
பல வருட காலமாகவே சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் ஏராளம். ஆயிரம் எபிசோடுகளுக்கு மேலாக வெற்றிகரமாக பல சீரியல்கள் ஓடியது. இந்த கொரோனா காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பழைய சீரியல்கள் எல்லாம் மறுஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது கூட ரசிகர்கள் பழைய சீரியல்களுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் .
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் குறித்த தகவல் தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .தொடர்ந்து சில மாதங்களாகவே ரசிகர்கள் எதிர்பார்க்காத சில சீரியல்கள் முடிவுக்கு வந்துவிடுகிறது. அதில் எதிர்நீச்சல் சீரியலும் ஒன்று. தற்போது டிஆர்பியில் டாப்பில் இருக்கும் வானத்தைப்போல தொடரும் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.