CINEMA
எதற்காக 10 தலைமுறைக்கு சொத்து சேர்க்கணும்…. பணக்காரியா சாக விரும்பவில்லை – நடிகை டாப்ஸி…!!!
பாலிவுட் நடிகை டாப்ஸி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். “உன்ன வெள்ளாவி வச்சி தான் வெளுத்தங்களா” என்ற படத்தின் மூலம் இன்னும் பிரபலமானார். இந்நிலையில் கடந்த 2024 இல் டேனிஷ் பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை டாப்ஸி, நான் எதற்காக பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டும்.
நான் கடுமையாக உழைக்கிறேன். அந்த பணத்தை நான் நன்றாக செலவிட விரும்புகிறேன். நான் பணக்காரியாக சாக விரும்பவில்லை. பணக்காரியாக வாழ விரும்புகிறேன். அடிப்படையாக சில விஷயங்களை என் எதிர்கால சந்ததிக்கு விட்டு செல்வேன் என்று கூறியுள்ளார்.