CINEMA
வயநாட்டு மக்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளித்த “தங்கலான்” படக்குழு…!!!
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல நல்ல உள்ளம் படைத்தவர்களும் நன்கொடை அளித்து வருகின்றனர். அந்தவரிசையில் ‘தங்கலான்’ படக்குழு, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ. 5 லட்ம் நிவாரணமாக வழங்கியுள்ளனர்.
முன்னதாக கேரளாவில் நடைபெற இருந்த “தங்கலான்” பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியை ரத்து செய்த படக்குழு, புரொமோஷனுக்கு ஆகும் செலவுத் தொகையை, கேரள முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். ‘தங்கலான்’ படம் வருகிற 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.