CINEMA
அடேங்கப்பா…! இத்தனை கிலோ தங்கமா…? லீக்கான குஷ்பூவின் சொத்து மதிப்பு…!!
குழந்தை நட்சத்திரமாக திரை பயணத்தை தொடங்கி பிறகு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. பாலிவுட்டில் இருந்து கோலிவுட் பக்கம் வந்தவர். தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அதன் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனார். சூப்பர் ஸ்டார் மற்றும் பிரபுவுடன் இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் நடித்தார். இந்த படம் குஷ்புவிற்கு நல்ல இடத்தைப் பிடித்துக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களோடு நடித்து வந்தார். இதற்கிடையில் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவருடைய சொத்து மதிப்பு விபரங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது குஷ்புவிடம் தற்போது 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி, 4.55 கோடி அசையா சொத்துக்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. ஆக மொத்தம் குஷ்புவிடம் 100 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.