CINEMA
மனைவியை விட்டு செல்பவன் மனிதனே அல்ல…. நடிகை குஷ்பூ காட்டம்…. வைரலாகும் X பதிவு…!!
நடிகை குஷ்பூவின் எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மனைவியை விட்டு செல்பவன் மனிதனல்ல என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும் எல்லாவற்றிற்கும் மேல் தன் குடும்பத்தை வைத்து போற்றுபவன் தான் உன்னதமான மனிதன் எனவும், மனைவியை மதிப்பதென்பது அடிப்படை குணம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சுயநலத்தால் செய்யும் தவறுகள் பூமராங்கை போல மீண்டும் உங்களையே தாக்கும் என்றும் கூறியுள்ளார்.
உங்களை அளவு கடந்து நேசிக்கும் மனைவியை அவமதிப்பது நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை காட்டுகிறது. அது இதயத்தையே நொறுங்க செய்கிறது. தன்னை வாழ்க்கையில் முன்னேற்ற நினைப்பான். எல்லா நாளையும் மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், பரஸ்பரம் மரியாதை இருக்கும்பட்சத்தில் கடினமான நாட்களை கூட நம்பிகையை வைத்து கடந்து செல்லலாம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் குஷ்பூ யாரை சொல்கிறார்? ஜெயம் ரவியை மறைமுகமாக சொல்கிறாரா என்று குழப்பத்தில் உள்ளார்கள்.