CINEMA
அடையாறு கூவத்துல இடுப்பளவு சாக்கடை அள்ள விட்டுட்டாங்க…. நடிகர் சூரி உருக்கம்….!!
சின்னத்திரையிலும் சரி, வெள்ளித்திரையிலும் தீபாவளி, வின்னர் போன்ற படங்களிலும் சில நிமிடம் தலைகாட்டி வந்தவர் தான் பிரபல காமெடி நடிகர் சூரி. இவர் முதன்முதலாக ஒரே ஒரு பரோட்டா காட்சி மூலம் பல வருடங்கள் பேச வைக்கும் அளவிற்கு மாறி இப்போதும் பரோட்டா சூரி என்று கொண்டாடப்பட்டு வருகிறார். கஷ்டப்பட்டு சாதிக்க துடித்த இவருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு தான் வெண்ணிலா கபடி குழு. அங்கு ஆரம்பித்த இவருடைய பயணம் ரஜினி, சூர்யா, அஜித்,சிவ கார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களோடு படங்களின் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
காமெடியாக கலக்கி வந்த இவர் விடுதலை படம் மூலமாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தற்போது இவர் கொட்டுக்காளி படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் பேசிய பேட்டியில், சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது கிளீனர் வேலைன்னு கூப்பிட்டாங்க. நானும் போனேன். அப்புறம்தான் தெரிஞ்சது லாரி கிளீனர் வேலை இல்லை. சாக்கடை அள்ளுற வேலைன்னு. அடையாறு கூவத்துல இடுப்பளவு சாக்கடை அள்ள விட்டுட்டாங்க என்று பேசியுள்ளார்.