CINEMA
திருப்பி அடிக்காத பாட்ஷா…. படம் பார்த்து அழுவீர்கள்…. நந்தன் படத்தை பாராட்டிய சூரி…!!
சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் நந்தன். இந்த படத்தை இரா.சரவணன் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள நந்தன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலமாக ஏற்படும் சாதிய கொடுமைகள் குறித்து இந்த திரைப்படம் அழுத்தமாக பேசியுள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நந்தன் திரைப்படத்தை பாராட்டி பேசியுள்ளார் நடிகர் சூரி. அதாவது, திருப்பி அடிக்காத பாட்ஷாவை பார்த்தது போல் உள்ளது. நிறைய இடங்களில் உங்களை அறியாமல் கைதட்டுவீர்கள், விசில் அடிப்பீர்கள், அழுவீர்கள். ஒரு சிறப்பான படம் பார்த்த அனுபவத்தை தரும் என்று கூறியுள்ளார்.