CINEMA
சகுனிங்க இருக்குற இந்த உலகத்துல…. யோக்கியவானா இருந்தா பிழைக்கமுடியாது – ரஜினிகாந்த்…!!

ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையின் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவரோடு அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் நடித்தார்கள். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 10ஆம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது . நேற்று வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் ரஜினி, கீழே விழுந்தால் உடனே எழுந்து மேலே வர வேண்டும். யார் நம்மை மிதிக்க நினைக்கிறார்களோ, அவர்களை மிதித்து நாம் முன்னேற வேண்டும். காலம் ரொம்ப பொல்லாதது. ஒரே நேரத்தில் நம்மை உச்சத்துக்கு கொண்டு செல்லும். பிறகு எதிர்பார்க்காத போது, நம்மை அதல பாதாளத்தில் தள்ளிவிடும். அதனால் ரொம்ப ஆடக்கூடாது என்று பேசியுள்ளார்.
மேலும் சகுனிங்களா இருக்க இந்த உலகத்துல யோகியவானா இருந்தா பிழைக்க முடியாது. சாணக்கியத்தனமும் இருக்கனும், சாமர்த்தியமும் இருக்கனும். உங்ககிட்ட சாணக்கியத்தனமும் இருக்கு, சாமர்த்தியமும் இருக்கு என்று ஞானவேல் ராஜா குறித்து பேசியுள்ளார்.