CINEMA
“கண் கலங்கிவிட்டேன்” அருமையான படைப்பு…. நந்தன் படம் குறித்து வீடியோ வெளியிட்ட SK…!!

சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் நந்தன். இந்த படத்தை இரா.சரவணன் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள நந்தன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலமாக ஏற்படும் சாதிய கொடுமைகள் குறித்து இந்த திரைப்படம் அழுத்தமாக பேசியுள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நந்தன் திரைப்படத்தை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நந்தன் படம் பார்த்து நிறைய இடத்தில் சிரித்தேன் .நிறைய இடத்தில் யோசித்தேன். நிறைய இடத்தில் கண் கலங்கினேன்,. கடைசியாக வேகமாக கைத்தட்டினேன். மிக மிக எதார்த்தமான உண்மைக்கு மிக நெருக்கமான படம். நந்தன் அருமையான படைப்பு என்று கூறியுள்ளார்.
https://twitter.com/i/status/1836962991612268667