CINEMA
சசிகுமாருடன் புதிய படத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தம்…. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில்…!!
ராஜுமுருகன் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சசிகுமார். அடுத்ததாக ‘நந்தன்’ படம் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் நடிகை சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
குட் நைட், கருடன் போன்ற படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது