அடடே…! KPY பாலாவிற்கு அடித்த ஜாக்பாட்…. இனி சின்னத்திரையில் பாக்கவே முடியாதா…?? - cinefeeds
Connect with us

CINEMA

அடடே…! KPY பாலாவிற்கு அடித்த ஜாக்பாட்…. இனி சின்னத்திரையில் பாக்கவே முடியாதா…??

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் KPY பாலா. இவர் தன்னுடைய மீடியா பயணத்தை கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தான் ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்களை கலகலப்பாக வைத்துக் கொண்டார். இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மீடியாவில் சாதிக்க வந்த இவர் தற்போது மக்களுக்கு சேவை செய்யும் ஒருவராக மாறியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கூட காது கேட்காத குழந்தைகள் பலருக்கும் மிஷின் வாங்கி கொடுத்துள்ளார். தான் செய்யும் சேவைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதன் மூலம் பலரை சேவை செய்ய அழைப்பதாகவும் கூறி இருந்தார். இந்த நிலையில் மீடியா துறையில் பெரிய அளவில் வளர்ந்து வரும் பாலாவுக்கு பாலா ரணம் படை இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Advertisement