VIDEOS
“என் வாழ்க்கையில் நான் ஓட்டும் முதல் புதிய பைக் இதுதான்”…. KPY பாலா வெளியிட்ட வீடியோ…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக பங்கேற்ற பலரும் இன்று மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர். அப்படி சின்ன திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் KPY பாலா. இவர் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் வெட்டுக்கிளி என்று அழைக்கப்படும் இவர் காமெடி செய்து மற்றவர்கள் கொடுக்கும் கவுண்டருக்கு உடனடியாக பதில் கவுண்டர் கொடுப்பதில் வல்லவர். தற்போது இவர் பல திரைப்படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் புல்லட் ரக பைக் ஒன்றை அன்பளிப்பாக பெற்றுள்ளார். இதனை பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
அந்தப் பதிவில் நான் பெட்ரோல் இல்லாமல் பைக்கை தள்ளிட்டுப் போனால் எனக்கு புல்லட்டை கொடுத்ததற்கு நன்றி எனவும் இத்தனை நாளில்தான் ஓட்டு முதல் புதிய பைக் இதுதான் என்றும் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
