TVK மாநாட்டிற்கு நான் போறேனா…? நான் சாதாரண ஆளு…. விஜய் பெரிய லெஜெண்ட்…. KPY பாலா சொன்ன விஷயம்…!!! - cinefeeds
Connect with us

CINEMA

TVK மாநாட்டிற்கு நான் போறேனா…? நான் சாதாரண ஆளு…. விஜய் பெரிய லெஜெண்ட்…. KPY பாலா சொன்ன விஷயம்…!!!

Published

on

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் பாலா தனது காமெடி மூலமாக மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்த பாலா தற்போது பல நெகிழ்ச்சியான சம்பவங்களை செய்து வருகிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அனைவரையும் கலகலப்பாக வைத்திருந்தார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட பிறருக்கு உதவி செய்ய யோசனை செய்யும் நிலையில் தான் வாங்கும் சம்பளத்தை தனக்கென வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு தானதர்மம் செய்து வருவதை முழு நேரமும் வேலையாக வைத்திருக்கின்றார் பாலா.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இவரிடம் தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டில் கலந்துகொள்வீர்களா? என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், விஜய் சார் மிகப்பெரிய லெஜென்ட். நான் சாதாரண ஆளு. அவருடைய மாநாட்டில் கலந்துகொள்ற அளவுக்கு நான் பெரிய ஆளு இல்ல. ஆனால் அவருடைய மிகப்பெரிய ரசிகர் என்று கூறியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in