CINEMA
அதை பத்தி அடுத்தவன் சொல்லக்கூடாது…. நமக்குள்ள அது தோணனும் – கார்த்திக் சுப்புராஜ்…!!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்ஸா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். பீட்ஸா திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஓன்று. முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அவதாரம் எடுத்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.பீட்ஸா வெற்றியை தொடர்ந்து சித்தார்த்தை வைத்து ஜிகர்த்தண்டா படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்த்தண்டா படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் விஜய் சேதுபதியை வைத்து இறைவி படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். அதன்பின்னர் பேட்ட படத்தை இயக்கினார்.
தற்போது சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே வைத்து சூர்யா 44 படத்தை எடுக்கிறார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், இந்த படம் ஆக்ஷன் கலந்த லவ் ஸ்டோரி. நல்ல படம் பண்ணிருக்கோமா இல்லையானு அடுத்தவன் சொல்லக்கூடாது. அது நமக்குள்ள தோணனும். வசூல் முக்கியமில்ல படம் நல்லா இருக்கான்னு மட்டும் தான் பாக்கணும் என்று கூறியுள்ளார்.