CINEMA
செருப்பை போட்டுக்கொண்டு கிளம்பிடுங்க…. சூப்பர் தத்துவம் சொன்ன இயக்குனர் செல்வராகவன்…!!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. இயக்குனர் செல்வராகவன் பிரபல நடிகர் தனுஷின் அண்ணனும் ஆவார். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இயக்குனராக மட்டுமின்றி தற்பொழுது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவர் ஒவ்வொரு நாளும் ஒரு தத்துவம் சொல்வதுண்டு. அந்தவகையில் இன்று காதல் தோல்வியோ அல்லது மனைவியுடன் சிக்கலோ, வேலையில் பிரச்சனையோ எக்காரணம் கொண்டு வேதனையில் படுத்து விடாதீர்கள். உலகம் உங்களை மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது. செருப்பை போட்டுக்கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள் என்று பகிர்ந்துள்ளார்.