LATEST NEWS
BREAKING: மீண்டும் மீளாத் துயரில் வயநாடு.. மரண பயத்தைக் காட்டிய நிலச்சரிவு.. நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ..!!
கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் மரண பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தின் கோரத் தாண்டவத்தை விளக்கும் வகையிலான பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே நிலச்சரிவின் பாதிப்புகளில் இருந்து மீளாத நிலையில், மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த பேரிடர் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் கிளப்பியுள்ளது.
A landslide at the Kalladi tunnel work site in #Wayanad blocked the road and injured 5 people. They have been taken to the hospital. No deaths have been reported. Work at the site had already been stopped because of heavy rain. The area received 265 mm of rain in the last 24… pic.twitter.com/3LrpPhR0gM— Ashish (@KP_Aashish) July 7, 2026
பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புக் குழுவினர் ஆபத்தான முறையில் ஒரு குகை போன்ற சுரங்கப் பாதை வழியாகச் சென்று, உள்ளே சிக்கியிருக்கும் மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்காகத் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மேற்கொண்டு வரும் அதிரடி மீட்பு நடவடிக்கைகளின் காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளன.
