“என் வீட்டுல மாட்டிறைச்சி சமைக்கக் கூடாது…” சொந்த வீடா இருந்தாலும் இத பண்ணக்கூடாது… வாடகைதாரருடன் சண்டையிட்ட இந்திய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் வீட்டுல மாட்டிறைச்சி சமைக்கக் கூடாது…” சொந்த வீடா இருந்தாலும் இத பண்ணக்கூடாது… வாடகைதாரருடன் சண்டையிட்ட இந்திய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!!!

Published

on

கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் திவானா என்ற பெண்மணி தனது வீட்டை ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். வாடகைக்கு இருப்பவர் அண்மையில் வீட்டுத் தோட்டத்தில் வைத்து பார்பிக்யூ முறையில் சமையல் செய்துள்ளார். அவர்கள் மாட்டிறைச்சியை அவ்வாறு பார்பிக்யூ செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜ் திவானா, தனது இடத்தில் மாட்டிறைச்சி சமைக்கக் கூடாது எனக் கூறி அவர்களைத் தடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவில், ராஜ் திவானா பார்பிக்யூவில் வைக்கப்பட்டிருந்த உணவை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதும், தனது இடத்தில் அதை சமைக்க அனுமதிக்க முடியாது என எச்சரிப்பதும் பதிவாகியுள்ளது. வாடகைக்கு இருப்பவருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை, வாடகைக்கு இருப்பவரின் நண்பர் தனது கைபேசியில் படம்பிடித்துள்ளார்.

Advertisement

இச்சம்பவத்திற்குப் பிறகு, வாடகைக்கு இருக்கும் நபர் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவேற்றி, ராஜ் திவானா தனது அனுமதியின்றி வாடகை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், கைகலப்பு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் வீட்டில் இல்லாத நேரத்தில் திவானா வீட்டிற்குள் நுழைந்து கதவின் பூட்டுகளை மாற்றித் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். வாடகைதாரரின் புகாரைத் தொடர்ந்து கனடா காவல்துறையினர் ராஜ் திவானாவைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in