“அவன் உன்னை ஒரு மாசத்துக்கு மேல வச்சுக்க மாட்டான்..!” பஞ்சாயத்து நடுவே கதறிய மனைவி.. குங்குமத்தை அழித்து கணவன் செய்த அதிரடி காரியம்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவன் உன்னை ஒரு மாசத்துக்கு மேல வச்சுக்க மாட்டான்..!” பஞ்சாயத்து நடுவே கதறிய மனைவி.. குங்குமத்தை அழித்து கணவன் செய்த அதிரடி காரியம்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

பீகார் மாநிலம் பாகல்பூரின் துளசிபூர் கிராமத்தில், திருமணமான சில நாட்களிலேயே கணவனைப் புறக்கணித்துவிட்டு வேறு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளம்பெண், தனது காதலனை நேரில் வரவழைத்த விவகாரத்தில் திருமண உறவை முறித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய விசித்திரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவன் கண்டித்தும் கேட்காமல் அந்தப் பெண் தொடர்ந்து பேசி வந்த நிலையில், நேற்று தனது காதலனைத் கிராமத்திற்கே வரவழைத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவன் காதலனைப் பிடிக்க முயன்றபோது அவன் தப்பியோடிவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியைக் கண்டிக்க முயன்றபோது, அந்தப் பெண் அங்கேயே சண்டையிட்டு, “இனி உன்னோடு வாழ முடியாது, உனக்கும் எனக்கும் இன்றோடு எந்த உறவும் இல்லை” என்று கூறி திருமணத்தை அதிரடியாக முறித்துக் கொள்வதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி, திருமணத்தின் போது அந்தப் பெண்ணிற்கு சீதனமாக வழங்கப்பட்ட நுகர்வோர் பொருட்கள் மற்றும் பரிசுகள் அனைத்தையும் ஒரு பிக்கப் வாகனத்தில் ஏற்றி, அந்தப் பெண்ணுடன் திருப்பி அனுப்பத் தயார் செய்தனர். ஆனால், அந்தப் பெண்ணை அப்படியே அனுப்ப மறுத்த கணவன், பஞ்சாயத்தார் முன்னிலையிலேயே அவளது நெற்றியிலிருந்த குங்குமத்தை அழித்து, கழுத்திலிருந்த மாங்கல்யத்தை அதிரடியாகப் பறித்துக் கொண்டு அவளை வீட்டை விட்டு விரட்டியடித்தார். “அவள் இப்போது அவளது காதலனிடம் போகிறாள், ஆனால் அவன் அவளை ஒரு மாதத்திற்கு மேல் வைத்திருக்க மாட்டான்” என்று கணவன் ஆக்ரோஷமாக முழங்கிய இந்த விசித்திரக் குடும்ப விவகார வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in