CRIME
“அண்ணன் இல்லாத நேரத்தில்…” அண்ணியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த வாலிபர்… கணவனுக்கு பயங்கர ஸ்கெட்ச் போட்ட மனைவி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் ஹன்மாஜிபேட் பகுதியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கூலித் தொழிலாளியான கணவன் காஷிராமை கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து ஏரியில் வீசிய மனைவி, அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட 3 பேரைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காஷிராமின் மனைவி சவிதாவுக்கும் (25), அவரது தம்பி முறை உறவினரான சந்தோஷ் (25) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. காஷிராம் வீட்டில் இல்லாத நேரங்களில் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் காஷிராமைத் தீர்த்துக்கட்டிவிட்டு சந்தோஷுடன் சேர்ந்து வாழ நினைத்த சவிதா, அதற்காகக் கொலைத் திட்டம் தீட்டியுள்ளார்.
இதே சமயத்தில், காஷிராம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு காரணமாக ராமு (26) என்பவருடன் அவருக்குப் பகை ஏற்பட்டுள்ளது. இதனால் காஷிராம் மீது பழிவாங்கக் காத்திருந்த ராமுவுடன், சவிதாவும் அவரது கள்ளக்காதலன் சந்தோஷும் கைகோர்த்துள்ளனர். இவர்களின் சதித்திட்டத்தின்படி, கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காஷிராமை சந்தோஷ் மது அருந்துவதற்காகப் பச்சிர ஏரி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காஷிராம் போதை தலைக்கேறி சுயநினைவின்றி கிடந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சந்தோஷும் ராமுவும், நைலான் கயிற்றால் அவரது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்து உடலை ஏரிக்குள் வீசிவிட்டுத் தப்பியுள்ளனர்.
காஷிராமின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஏரியிலிருந்து உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சந்தோஷைப் பிடித்து விசாரித்தபோது கொலையின் முழுப் பின்னணியும் அம்பலமானது. கடந்த அக்டோபர் 30ஆம் தேதி சந்தோஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சவிதா மற்றும் ராமு ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே மற்றவர்களுடன் சேர்ந்து கணவனைத் திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டிய கொடூரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
