CRIME
“என் காதலனுடன் தான் வாழுவேன்..” அடம்பிடித்த மனைவி.. அடிதடி செய்யாமல் கணவர் செய்த விசித்திர காரியம்.. பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த விபின் பார்கவா என்பவருக்கும் ரேகா என்ற பெண்ணுக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, 16 மற்றும் 14 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இல்லத்தரசியான ரேகாவுக்கு முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் செய்து பதிவிடுவதில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. இந்த ரீல்ஸ் மோகத்தால் சமூக வலைத்தள பக்கங்களில் மூழ்கிக் கிடந்த ரேகாவுக்கு, முகநூல் கமெண்ட் பகுதி வழியாக அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராகுல் உபாத்யாய் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேகா தனது காதலனுடன் திடீரென வீட்டை விட்டு ஓடிவிட, அதிர்ச்சியடைந்த கணவர் விபின் போலீசில் புகார் அளித்தார்.
சுமார் 22 நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 14 அன்று வீடு திரும்பிய ரேகா, தனக்குக் கணவருடன் வாழப் பிடிக்கவில்லை என்றும், காதலன் ராகுலுடன் தான் வாழப் போவதாகவும் பிடிவாதமாகக் கூறியுள்ளார். இதனால் வீட்டில் எவ்வித சண்டையோ, வன்முறையோ செய்யாத விபின், மனைவியின் பிடிவாதத்தை உணர்ந்து ஒரு விசித்திரமான முடிவை எடுத்தார். மிஸ்ரிக் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேவையான சட்டபூர்வ நடைமுறைகளை முடித்த விபின், தன் மனைவியையும் அவரது காதலனையும் ஒரு அனுமன் கோயிலுக்கு அழைத்துச் சென்று, அவர்கள் இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்து, டெல்லிக்கு வழி அனுப்பி வைத்தார். “எனது இரு மகன்களின் எதிர்காலம் தான் இனி எனக்கு முக்கியம்” எனக் கூறி விபின் விலகிய இந்த விசித்திரமான சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
