நோ சீரியல்… நோ மில்க்..! டிவி சீரியல் பார்த்தாத்தான் பால் தருவேன்…! அடம் பிடிக்கும் விசித்திர எருமை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நோ சீரியல்… நோ மில்க்..! டிவி சீரியல் பார்த்தாத்தான் பால் தருவேன்…! அடம் பிடிக்கும் விசித்திர எருமை..!!

Published

on

பொதுவாக விலங்குகள் புல் மேய்வதையோ அல்லது ஓய்வெடுப்பதையோ தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் உள்ள எருமை மாடு, ஒரு தீவிரமான தொலைக்காட்சி பிரியராக இருக்கிறது. இந்த எருமைக்கு டிவி பார்ப்பது என்றால் அத்தனை பிடிக்கும். எந்தளவிற்கு என்றால், டிவி-யில் தனக்கு பிடித்தமான சீரியல் அல்லது நிகழ்ச்சியைப் பார்க்காத வரை அது பால் கொடுக்கவே மறுத்து அடம் பிடிக்கிறது. இதனால் அந்த கிராம மக்களுக்கு பால் கறக்கும் நேரம் என்பது ஒரு பொழுதுபோக்கு நேரமாகவே மாறிவிட்டது.

வைரலாகி வரும் இந்த வீடியோவின் தொடக்கத்தில், நபர் ஒருவர் அங்கிருக்கும் பெண்ணிடம், “இந்த எருமை ஏன் பால் கொடுக்க மாட்டேங்குது?” என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண், “இது இப்போ பால் தராது, டிவி பார்த்த பிறகுதான் தரும்” என்று பதிலளிக்கிறார். வீடியோவில், அந்த எருமை மாடு அறையின் வாசலில் அசையாமல் நின்றுகொண்டு, உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சித் திரையை கண் இமைக்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கையில் வாளியுடன் இருக்கும் பெண், அதன் முதுகில் தட்டி அங்கிருந்து நகர்த்த எவ்வளவு முயற்சி செய்தும், அந்த எருமை தன் இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட நகர மறுக்கிறது.

Advertisement

https://www.instagram.com/reel/DactXw7tQ7h/?utm_source=ig_web_button_share_sheet

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வேடிக்கையான வீடியோ, “நோ சீரியல், நோ மில்க்” என்ற தலைப்புடன் வெளியாகி, 18 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களின் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர், “இது எருமை மாடு இல்லை, வீட்டின் கடைசி செல்ல மகள்” என்றும், இன்னும் சிலர் “இன்று டிவி பார்க்கிறது, நாளைக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்த பிறகுதான் பால் தருவேன் என்று அடம் பிடிக்கும்” என்றும் நகைச்சுவையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றாலும், இது இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in