LATEST NEWS
FLASH: முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் மாடியிலிருந்து தவறி விழுந்து மரணம்… சற்றுமுன் அதிர்ச்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. அமைச்சரான நானக் ராம் புர்ஜி (68), லக்னோவில் உள்ள எம்.எல்.ஏ. குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஏதோ ஒரு வேலையாக அந்த குடியிருப்பிற்குச் சென்ற அவர், திடீரென மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். உடனே மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர் உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய முக்கியப் பிரமுகர் என்பதால், இந்த மரணம் தற்செயலாகத் தவறி விழுந்த விபத்தா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் சதி மற்றும் கொலைக் குற்றம் உள்ளதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்த மர்ம மரணம் குறித்து லக்னோ காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை, விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
