“உன் பொண்ணு சாவுறதை பாரு” பெற்றோருக்கு வீடியோ கால்.. துடிதுடிக்க மரணம்… மனைவியை தூக்கிலிட்டு நேரலையில் காட்டிய கணவன்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!! – cinefeeds
Connect with us

CRIME

“உன் பொண்ணு சாவுறதை பாரு” பெற்றோருக்கு வீடியோ கால்.. துடிதுடிக்க மரணம்… மனைவியை தூக்கிலிட்டு நேரலையில் காட்டிய கணவன்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

Published

on

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம், பிலகி தாலுகாவில் உள்ள கலகலி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (29) என்பவருக்கும், பாக்யஸ்ரீ (23) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. பாக்யஸ்ரீயின் நடத்தை மீது கணவர் பிரவீனுக்கு ஏற்பட்ட கடுமையான சந்தேகத்தால், இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாகத் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த பாக்யஸ்ரீயை, இனிமேல் எந்தச் சண்டையும் இல்லாமல் சமாதானமாக வாழலாம் என்று ஆசைவார்த்தை கூறி பிரவீன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அழைத்து வந்த அன்றைய தினமே, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், பாக்யஸ்ரீயை மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். பின்னர், அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போதே, அறையிலிருந்த துப்பட்டாவால் அவரைத் தூக்கிலிட்டுள்ளார். அந்த பயங்கரமான தருணத்தில், பாக்யஸ்ரீ உயிருக்குப் போராடுவதைக் காப்பாற்றாமல், பிரவீன் தனது கைப்பேசியில் அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். மேலும், பாக்யஸ்ரீயின் பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் செய்து, அவர்களின் மகள் துடிதுடித்து இறப்பதை நேரலையாகக் காட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisement

மகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாக்யஸ்ரீயின் பெற்றோர், உடனடியாகப் பிலகி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பாக்யஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியைக் கொலை செய்து, அந்த வீடியோவை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து வக்கரித்த பிரவீனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பிலகி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in