“ச்சீ… அம்மான்னு சொல்லவே அசிங்கமா இருக்கு..! 14 வயதுச் சிறுமிக்குத் தாயே செய்த துரோகம்..! பெற்ற மகளையே கள்ளக்காதலனுக்கு பலிகொடுத்த கேவலம்..!!” – cinefeeds
Connect with us

CRIME

“ச்சீ… அம்மான்னு சொல்லவே அசிங்கமா இருக்கு..! 14 வயதுச் சிறுமிக்குத் தாயே செய்த துரோகம்..! பெற்ற மகளையே கள்ளக்காதலனுக்கு பலிகொடுத்த கேவலம்..!!”

Published

on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராமச்சந்திரன் என்பவருக்கும், அவருடன் சித்தாளாக வேலை பார்த்து வந்த சரிதா என்ற பெண்ணிற்கும் இடையே சட்டவிரோதக் காதல் தொடர்பு இருந்துள்ளது. கணவனைப் பிரிந்து வாழும் சரிதாவுக்கு 14 வயதில் 9-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், சரிதா தன் மகளையே தன் கள்ளக்காதலன் ராமச்சந்திரனுக்குத் திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டுள்ளார். ஆனால், சிறுமிக்குத் திருமண வயது ஆகாததால் சட்டப் பிரச்சினைகள் வரும் என அஞ்சி தற்காலிகமாகத் திருமணத்தை ஒத்திவைத்துள்ளனர்.

திருமணம் தள்ளிப்போனாலும், ராமச்சந்திரன் அடிக்கடி சரிதாவின் வீட்டிற்கு வந்து அச்சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாய் சரிதாவிடம் பலமுறை அழுது முறையிட்டும், தாய் அதைப் பொருட்படுத்தாமல் ராமச்சந்திரனுக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளார். பெற்ற தாயே இந்த அநீதிக்குத் துணையாக நின்றதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அச்சிறுமி, படிப்பில் கவனமின்றி, பள்ளியில் யாரிடமும் பேசாமல் தனிமையிலும் உடல் சோர்வுடனும் காணப்பட்டுள்ளார்.

Advertisement

சிறுமியின் மாற்றத்தைக் கவனித்த திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலிஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலியல் கொடுமையும், அதற்குத் தாய் உடந்தையாக இருந்ததும் உறுதியானதால், ராமச்சந்திரன் மற்றும் சரிதா ஆகிய இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின், திருவள்ளூர் மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in