CRIME
பெண்களைக் கொல்ல கடவுள் அனுப்பினார்..! பிரான்ஸில் மகளிரைக் குறிவைத்து… கத்தியால் தாக்கிய நபர்..! இணையத்தை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் ‘போர்ட் டி க்ளிச்சி’ பகுதியில், நபர் ஒருவர் வீதியில் சென்ற பொதுமக்கள் மீது திடீரெனக் கத்தியால் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது, அவரிடம் இரண்டு கத்திகள் இருந்ததாகவும், கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் இந்தத் தாக்குதலில் காயமடைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலில் காயமடைந்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தாலும் அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும், மற்றொருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பாரிஸ் காவல்துறையினரும் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், தாக்குதல் நடத்திய 31 வயது இளைஞனை, அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மிகுந்த துணிச்சலுடன் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட அந்த நபர், “பெண்களைக் கொல்லவே கடவுள் என்னை அனுப்பினார்” என்று கூறியதாக விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ‘லே பரிசியன்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இளைஞர் ஆயுதத்துடன் பெண்ணை நோக்கி ஓடுவதும், பின்னர் பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடிப்பதும் போன்ற அதிர்ச்சியூட்டும் காணொளிகளும் வெளியாகி இணையத்தில் பரவி வருகின்றன.
