CRIME
“அவளோடு பேசினதை கேளு..!” வாட்ஸ்அப்பிற்கு வந்த அந்த ஒரு ஆடியோ.. லைவ் வீடியோ காலில் மனைவி விபரீத முடிவு.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் சிக்மகளூருவைச் சேர்ந்த சானிகா கவுடா என்பவருக்கும், பெங்களூருவில் கேப் டிரைவராகப் பணியாற்றி வரும் ஷரன் கவுடா என்பவருக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கர்ப்பமாக இருந்த சானிகா பெற்றோர் வீட்டிற்குச் சென்று பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகும், கணவருடனான மனக்கசப்பால் பெங்களூரு திரும்பாமல் அங்கேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில், தன் கள்ளக்காதலியுடன் பேசிய ஆடியோ உரையாடலை ஷரன் கவுடா மனைவியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சானிகா, கணவரை வீடியோ காலில் அழைத்து கதறி அழுதபடியே வாக்குவாதம் செய்துள்ளார். அழைப்பு ஓடிக்கொண்டிருக்கும்போதே, 7 மாதக் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த அறையில் சானிகா மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பரப்பன அக்ரஹாரா காவல் துறையினர், தலைமறைவாக உள்ள கணவர் ஷரன் கவுடாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
