“கண்ணெதிரே மனைவியின் துரோகம்..!” 5 பிள்ளைகளை பூட்டிவிட்டு தாய் செய்த காரியம்.. பிணமான கணவன்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“கண்ணெதிரே மனைவியின் துரோகம்..!” 5 பிள்ளைகளை பூட்டிவிட்டு தாய் செய்த காரியம்.. பிணமான கணவன்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி முகேஷ் ராவத் என்பவர், தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததை அடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் முகேஷின் மனைவி விமலா தேவி மற்றும் அவரது கள்ளக்காதலனான சுரங்கத் தொழில் அதிபர் கோபால் சிங் மீது முகேஷின் சித்தப்பாவிற்குச் சந்தேகம் எழுந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவருக்கும் இடையே இருந்த தகாத உறவைக் கண்டித்ததால், முகேஷைக் கொலை செய்துவிடுவதாக கோபால் சிங் ஏற்கனவே மிரட்டியிருந்ததும் காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சம்பவத்தன்று இரவு, விமலா தன் 5 குழந்தைகளையும் தனி அறையில் பூட்டி வைத்துவிட்டு, கள்ளக்காதலன் கோபால் சிங் மற்றும் அவரது கூட்டாளியுடன் சேர்ந்து முகேஷின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் இக்கொலையைத் தற்கொலை அல்லது இயல்பான மரணம் என நம்ப வைப்பதற்காக, முகேஷின் முகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தையும் ஊற்றி நாடகமாடியது அம்பலமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பீசாங்கன் காவல் நிலைய ஆய்வாளர் பாருல் யாதவ் தலைமையிலான காவல்துறையினர், மனைவி விமலா தேவி, கள்ளக்காதலன் கோபால் சிங் உட்பட 3 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in