“பதவி வேணும்னா ‘இதை’ பண்ணுங்க… தளபதி கொடுத்த ட்விஸ்ட்.. அலறும் அதிமுக மாஜிக்கள்… பனையூர் போட்ட உத்தரவு.. பரபரக்கும் அரசியல்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பதவி வேணும்னா ‘இதை’ பண்ணுங்க… தளபதி கொடுத்த ட்விஸ்ட்.. அலறும் அதிமுக மாஜிக்கள்… பனையூர் போட்ட உத்தரவு.. பரபரக்கும் அரசியல்..!!”

Published

on

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு இதுவரை கட்சியில் எவ்விதப் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சியின் தலைமையிடம் அவர்கள் தரப்பில் முறையிட்டபோது, முதலில் உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து களப்பணியாற்றுங்கள். அவர்கள் உங்களைப் பற்றி அளிக்கும் நற்சான்றிதழின் அடிப்படையில் தான் அடுத்தகட்ட பதவி வழங்கல் குறித்துப் பரிசீலிக்கப்படும் என பனையூர் தரப்பிலிருந்து திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டு விட்டதாம்.

தலைமையின் இந்த அதிரடி அறிவிப்பால் C. விஜயபாஸ்கர் போன்ற முக்கிய மாஜி நிர்வாகிகள் கடும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் தங்களின் செல்வாக்கையும் உழைப்பையும் நிருபிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள அவர்கள், தங்களுக்குரிய தொகுதிகளில் கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்தி, களத்தில் பரபரப்பாக இயங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in